உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமியாரை கேலி செய்தவரை வெட்டிய மருமகன் சிக்கினார்

மாமியாரை கேலி செய்தவரை வெட்டிய மருமகன் சிக்கினார்

திரு.வி.க. நகர்,திரு.வி.க.நகர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தங்கியபடி கூலி வேலை செய்பவர் மோகன், 24. இவர், திரு.வி.க.நகர் மீன் மார்க்கெட்டில் மீன் சுத்தம் செய்யும் தங்கம் என்ற பெண்ணை, மது போதையில் கிண்டல் செய்துள்ளார்.இதுகுறித்து தங்கம், மருமகன் ஸ்ரீதரிடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், 24, நண்பர் வினோத், 29, உடன் இணைந்து, மோகனை, அதே மீன்மார்க்கெட்டில் வைத்து கத்தியால் சரமாரியாக வெட்டினார்.இதில் மோகனுக்கு 40 தையல் போடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த திரு.வி.க., நகர் போலீசார், தலைமறைவாக இருந்த ஸ்ரீதர், 24, மற்றும் கூட்டாளியான வினோத், 29, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், வினோத் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை