உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருவள்ளூர் சிறுவர்கள் சதுரங்கத்தில் அபாரம்

 திருவள்ளூர் சிறுவர்கள் சதுரங்கத்தில் அபாரம்

சென்னை: மாநில அளவிலான சதுரங்க போட்டியில், திருவள்ளூர் மாவட்ட சிறுவர் - சிறுமியர், முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தினர். 'ஏ மேக்ஸ்' அகாடமி சார்பில், 11வது மாநில அளவிலான சதுரங்க போட்டி, அம்பத்துார், சேதுபாஸ்கரா பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 8,10, 12, 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப் பட்டன. பிரிவாக ஐந்து முதல் ஆறு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடத்தப்பட்டன. எட்டு வயது பிரிவில், திருவள்ளூரைச் சேர்ந்த மாணவரில் வியன் பிரவேரா, 8, தருகேஷ், 8, மாணவியரில் அம்ருதா, 8, ஆனந்தயாழினி, 8; 10 வயதில் பினாவ், 10, ராம் சரண், 10; மாணவியரில் தனிஷா, 10, நக் ஷத்திரா, 10, ஆகியோர் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். மாணவரில் 12 வயதில் கவின் கமேஷ், 12, கிஷ்குருநாதன், 12; மாணவியரில் ஜெய் வைஷ்ணவி, 12, யாழினி, 12, மற்றும் 15 வயதில் அதே வயதுடைய திருவள்ளூர் தனிஷ், விக்னேஷ்வர், மாணவியரில் சென்னையைச் சேர்ந்த வருணவி, இதிஹாசனா ஆகியோர், முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். ஆண்கள் 25 வயது பிரிவில் அதே வயதுடைய ஹரிஸ் கார்த்திக், அரவிந்தன் மற்றும் சோஹன் ஹர்ஷத் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். பெண்களில், சென்னையைச் சேர்ந்த நிர்மலா மற்றும் கிர்த்திகா முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். சென்னை வீரர் - ---வீராங்கனையரை தவிர மற்ற அனைவரும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களே, முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை