உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூரில் இனி நிற்கும்

 திருவனந்தபுரம் விரைவு ரயில் மொரப்பூரில் இனி நிற்கும்

சென்னை - கேரளா மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நின்று செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் -- திருவனந்தபுரத்துக்கு, தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு, தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் நிறுத்தம் வழங்க வேண்டும் என, அம்மாவட்ட பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் தெரிவித்தார். இந்நிலையில், சென்னை -- திருவனந்தபுரம் விரைவு ரயில், மொரப்பூரில் நின்று செல்ல ஒப்புதல் அளித்து, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எந்த தேதி முதல் இது அமலுக்கு வரும் என்பதை, தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ