| ADDED : டிச 07, 2025 05:33 AM
கீழ்க்கட்டளை: பரங்கிமலையில் இருந்து சிறுசேரி வரை, மெட்ரோ ரயில் பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. உயர்மட்ட துாண்கள் அமைக்கப்பட்டு, தண்டவாளம் அமைக்க பால இணைப்புக்கான கட்டுமான பணிகள் நடக்கின்றன. மடிப்பாக்கம் - கீழ்க்கட்டளை பேருந்து நிறுத்தம் அருகே, ராட்சத கிரேன் மூலம் பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், நேற்று காலை 6:30 மணிக்கு, ராட்சத கிரேன் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால், சாலையில் இருந்து ராட்சத கிரேனை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், காலையில் பணிக்கு செல்வோர், பள்ளி மாணவ - மாணவியர் வாகன நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். தகவலின்படி அங்கு வந்த மடிப்பாக்கம் போக்குவரத்து போலீசார், வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். அதன் பின், காலை 8:30 மணிக்கு போக்குவரத்து சீரானது.