உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காய்கறிகள் விற்பனை மந்தம் கிலோவிற்கு ரூ.10 - 20 சரிவு

 காய்கறிகள் விற்பனை மந்தம் கிலோவிற்கு ரூ.10 - 20 சரிவு

கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் காய்கறி கள் வரத்து அதிகரித்தும், நுகர்வோர் வரத்து குறைந்து விற்பனை மந்தமானதால், காய்கறிகள் விலை கிலோவிற்கு 10 - 20 ரூபாய் சரிந்தது. கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், காய்கறி வரத்து உள்ளது. நேற்று மட்டும், 8,000 டன் காய்கறிகள் வந்தன. ஆனால், நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் வரத்து குறைந்து, போதிய விற்பனை இன்றி, அனைத்து பச்சை காய்கறிகள் விலையும், 10 -- 20 ரூபாய் வரை குறைந்து விற்பனையானது. இதையடுத்து, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட், நேற்று 35 - 40 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும், 50 ரூபாய்க்கு விற்பனையான முள்ளங்கி, நேற்று 20 - 25 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை