உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.45,500 உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபரின் நேர்மைக்கு பாராட்டு

 ரூ.45,500 உரியவரிடம் ஒப்படைப்பு வாலிபரின் நேர்மைக்கு பாராட்டு

ஆவடி: முதியவர் தவறவிட்ட 45,500 ரூபாயை மீட்டு கொடுத்த வாலிபரை, போலீசார் பாராட்டினர். ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம், தோட்டகார தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 28. நேற்று முன்தினம் மாலை, இவரது வீட்டு வாசலில் கிடந்த துணிப்பையில் 45,500 ரூபாய் மற்றும் பில் ஒன்று இருந்தது. சரவணன், அந்த பணத்தை, ஆவடி முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், ஆவடி அடுத்த வாணியசத்திரம் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவராவ், 60 என்பவரின் பணம் என தெரிந்தது. பாண்டேஸ்வரத்தில் உள்ள கல் சேம்பரில் பணிபுரியும் இவர், சம்பவத்தன்று கலெக்ஷன் செய்து முடித்து, சேம்பருக்கு திரும்பும்போது பணத்தை தவறவிட்டது தெரிந்தது. ஆவடி முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சாம்பசிவராவை நேரில் வரவழைத்து நேற்று முன்தினம் பணத்தை ஒப்படைத்தார். மேலும், பணத்தை மீட்டு கொடுத்த சரவணனுக்கு, சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை