உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  புதிதாக 40 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை தொகை

 புதிதாக 40 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை தொகை

கோவை: கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை, 3.85 லட்சம் பேர் பெற்று வரும் சூழலில் மேலும் 40 ஆயிரம் மகளிருக்கு வழங்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக, மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 1.90லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. விண்ணப்பதாரரின் வருவாய் விவரங்களை, வருவாய்த்துறை பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.விதிமுறைகளின் கீழ் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அந்த வகையில், 11 தாலுகாவிலிருந்து 1.90லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 1.50 லட்சம் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 40,000 தகுதியான விண்ணப்பதாரர்கள்தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஜன.,முதல் மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மாவட்ட சமூகநல பாதுகாப்புத்திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டு, 40 ஆயிரம் மகளிரின் வங்கிக்கணக்கில் 1,000 ரூபாய் செலுத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை