மேலும் செய்திகள்
பிரதமரின் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்
2 minutes ago
சேவல் சண்டை; 16 பேர் கைது
6 minutes ago
அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்
6 minutes ago
கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
6 minutes ago
பொள்ளாச்சி: கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து, தமிழக எல்லையோர தோட்டத்தில் எரித்த ஐந்து பேரை வடக்கிபாளையம் போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே, வடக்கிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட எஸ்.நாகூரில் உள்ள தோட்டத்தில், கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து, தீ வைத்து எரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். அதில், எஸ்.நாகூரில், முத்துக்குமாரசாமி என்பவரது தோட்டத்தில், தொழிற்சாலை கழிவுகளை கொண்டு வந்து கொட்டி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, தோட்டத்து உரிமையாளரின் மகன், மாப்பிள்ளைகவுண்டன்புதுாரை சேர்ந்த ஜெகதீசன்,43, திருமூர்ர்த்தி,30, சரக்கு வாகன டிரைவர்கள் கேரளா மாநிலம் வடக்கஞ்சேரியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், 39, சொர்னுாரை சேர்ந்த நித்திபாபு,35, மற்றும் பாரம் ஏற்றும் தொழிலாளி சுபீஷ்,36 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: கேரளா மாநிலத்தில் இருந்து எஸ்.நாகூருக்கு குறுக்கு வழியில் தொழிற்சாலை கழிவுகளை கொண்டு வந்து, தோட்டத்தில் கொட்டி தீ வைத்து எரித்துள்ளனர். கடந்தாண்டு இதுபோல கேரளா மாநில கழிவுகள் கொண்டு வந்து எரித்ததற்காக ஜெகதீசன்,43, மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இதுபோன்று செயலில் ஈடுபட்டதால், ஜெகதீசன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளோம். கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து கொட்டினாலோ, இதுபோன்று செயலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.
2 minutes ago
6 minutes ago
6 minutes ago
6 minutes ago