இரவு நேர விபத்துகளுக்கு மதுவே முக்கிய காரணம்
கோவை: இரவில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வாகனத் தணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியமாகியுள்ளது. போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோவையில் கடந்த, 10 மாதங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக, 13 ஆயிரத்து, 357 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் இரவில் பதியப்பட்டவை. மது அருந்தி வாகனம் ஓட்டினால், உடனடியாக வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. இரவில் வாகனத் தணிக்கை நடத்தி, அபராதமும் விதிக்கப்படுகிறது. வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.