உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பைக் விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

 பைக் விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை: வாகன பதிவு சான்றை திருப்பித்தராததால், பைக் விற்பனை நிறுவனம், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த முத்துலட்சுமி, மேட்டுப்பாளையத்திலுள்ள ஸ்ரீ எஸ்.பி.எஸ்., ஆட்டோமொபைல் விற்பனை நிறுவனத்தில், தவணை முறையில் பைக் வாங்கினார். முழு கடன் தொகையும் செலுத்தியதும், பைக்கின் வாகன பதிவு சான்றிதழை திருப்பி கேட்டிருக்கிறார். ஆனால் அந்நிறுவனம், அசல் சான்றிதழை திரும்ப தராமல், தொடர்ந்து கால தாமதம் செய்தனர். இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'ஆட்டோ மொபைல் விற்பனை நிறுவனம், வாகன அசல் பதிவு சான்றிதழை, இரண்டு மாதத்திற்குள் திருப்பி வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு 10, 000 ரூபாய், பதிவு சான்றிதழை வழங்க தவறினால், உத்தரவை நிறைவேற்றும்வரை தினசரி, ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை