உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கே.கே.புதுாரில் வீணாகிறது போர்வெல் நீர்

 கே.கே.புதுாரில் வீணாகிறது போர்வெல் நீர்

போர்வெல் பழுது; வீணாகிறது நீர் கே.கே.புதுார், ராமலிங்க நகர், மூன்றாவது கிராஸ் வீதியில் போர்வெல் தண்ணீர் வீணாகி வருகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போர்வெல்லை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். - ஜானகி லட்சுமணன்: குண்டும் குழியுமாக சாலை மாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி, சேரன்மாநகர் ஆசிரியர்கள் காலனியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. - மல்லிகார்ஜுனன்: சாலையைசீரமைக்க வேண்டும் சரவணம்பட்டி, சக்தி கார்டனில், பாதாள சாக்கடை கால்வாய் பணி முடிந்தபின், கான்கிரீட் மிக்ஸ் அமைக்காமல், களி மண்ணை அப்படியே விட்டு விட்டனர். மழை காலங்களில், இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். - சங்கர்: வாகனங்கள் இயக்க சிரமம் கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், சக்தி அவென்யூவில், பாதாள சாக்கடை கால்வாய் பணிக்காக சில மாதங்களுக்கு முன், தோண்டப்பட்ட சாலைகள், இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன. வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. - நந்தகுமார்: பஸ் ஸ்டாப் அருகே சங்கடம் திருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் பஸ் ஸ்டாப் - சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில், மழை காலங்களில் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு, சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. - ராபர்ட்: சாக்கடை கால்வாயை துார்வாரணும் செல்வபுரம், சாஸ்தா நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - கிருத்திகா: அடிக்கடி விபத்து வெள்ளக்கிணர் - சமத்துவபுரம் ரோடு, அம்மாசை கவுண்டர் வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில், இக்குள்ள குழிகளில் நீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். - ராஜா: நடைபாதையை திறக்க வேண்டும் செல்வபுரம், சிந்தாமணி குளக்கரை நடைபாதை பகுதி நீண்ட நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி பராமரிப்பின்றி, புதர்போல் காட்சியளிக்கிறது. - பாலமுருகன்: போக்குவரத்து போலீசார் வேண்டும் பொள்ளாச்சி - கோவை ரோடு, சுந்தராபுரத்தில், தனியார் மருத்துவமனை அருகில் உள்ள யுடர்ன் பகுதியில், நிமிடத்துக்கு நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இப்பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும். - கனகராஜ், குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ