உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சங்கரா கல்லுாரியில் கேக் மிக்சிங் திருவிழா

 சங்கரா கல்லுாரியில் கேக் மிக்சிங் திருவிழா

கோவை: சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பில், கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா, கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கேட்டரிங் 'அட் மைசெப்ஸ்டோரியின்' நிறுவனர் மற்றும் ஹோமியோபதி டாக்டர் ஸ்ரேயா வும்மிடி கலந்துகொண்டார். கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கேக் மிக்சிங் பணியில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஈடுபட்டனர். கல்லுாரி துணை இணைச் செயலாளர் நித்யா, முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத் தலைவர் செப் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை