உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்: புகையிலை விற்றவருக்கு சிறை

சிட்டி கிரைம் செய்திகள்: புகையிலை விற்றவருக்கு சிறை

; கோவை உக்கடம் போலீசார் நடத்திய ஆய்வில், பெரியகடை வீதி மணிக்கூண்டு அருகே உள்ள பெட்டிக்கடையில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. புகையிலை விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சிறுகுடியை சேர்ந்த சித்ராதேவி, 39 என்பவரை சிறையில் அடைத்தனர். அதேபோல், பீளமேடு போலீசார் பீளமேடு அவிநாசி ரோட்டில், பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட, சிங்காநல்லுாரை சேர்ந்த பாண்டியன், 50 என்பவரை கைது செய்தனர். வடமாநிலத்தவர் தகராறு: உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்தவர் பவன்குமார், 43. கோவை தொண்டாமுத்துாரில் தங்கி, பெயின்டிங் தொழில் செய்து வருகிறார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் பெயின்ட் கடை வைத்துள்ள இவரது ஊரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம், பெயின்ட் வாங்குவது வழக்கம். அங்கு பெயின்ட் வாங்கும், இவரது ஊரை சேர்ந்த உபேந்தர்சிங், 43, ஹர்த்திக் பிரதாப்சிங், 20 ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 18ம் தேதி, கரிவரதராஜ பெருமாள் கோயில் அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உபேந்தர்சிங் மதுபோதையில், ராஜ்குமாருடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து, ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்ற உபேந்தர்குமார், ராஜ்குமாரின் மகனுடன் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த ராஜ்குமார் மற்றும் பவன்குமார் ஆகியோர் உபேந்தர்சிங், மற்றும் ஹர்த்திக் பிரதாப்சிங் சந்தித்து கேள்வி எழுப்பினார். ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஹர்த்திக் பிரதாப்சிங் தாக்கினார். உபேந்தர்சிங் இரும்பு கம்பியால், ராஜ்குமாரை தாக்க முயன்றார். தடுக்க சென்ற பவன்குமாரை, உபேந்திரசிங் இரும்பு கம்பியால் தாக்கினர். அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், வழக்கு பதிந்த வடவள்ளி போலீசார் உபேந்திரசிங், ஹர்த்திக் பிரதாப்சிங் ஆகியோரை கைது செய்து பிணையில் விடுவித்தனர். உபேந்திரசிங் அளித்த புகாரின் பேரில் ராஜ்குமார், பவன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி