உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சமுதாய நலக்கூடம் கட்டும் பணி இழுபறி: ரொட்டிக்கடை பகுதி மக்கள் அதிருப்தி

 சமுதாய நலக்கூடம் கட்டும் பணி இழுபறி: ரொட்டிக்கடை பகுதி மக்கள் அதிருப்தி

வால்பாறை: ரொட்டிக்கடையில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், நகராட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். வால்பாறை நகரிலிருந்து, 6 கி.மீ.,தொலைவில் உள்ளது ரொட்டிக்கடை. இந்தப்பகுதியை சுற்றிலும் பாரளை, அய்யர்பாடி ஆகிய எஸ்டேட்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்காக, ரொட்டிக்டை பஜாரில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் பணி முடிவடையாததால், ரொட்டிக்கடை மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: ரொட்டிக்கடையில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், இப்பகுதியில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு தனியார் மண்டபத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தி நடத்தப்படுகின்றன. ஏழை, எளிய மக்கள் நிறைந்த ரொட்டிக்கடை பகுதியில் குறைந்த கட்டணத்தில் மக்கள் பயன்படுத்தும் வகையில், நகராட்சி சார்பில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு பணி துவங்கியது. இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், சமுதாய நலக்கூடம் கட்டும் பணி இழுபறியாக உள்ளது. சமுதாய நலக்கூடம் கட்டும் பணியை விரைவில் முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ரொட்டிக்கடை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ