உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரூ.25.36 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

 ரூ.25.36 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

நெகமம்: நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று, நடந்த ஏலத்தில், 299 மூட்டைகள் கொப்பரை, 25 லட்சத்து, 36 ஆயிரத்து, 954 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், முதல் தர கொப்பரை, 202.15 முதல் 221.01 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை, 170.14 முதல் 185.19 ரூபாய்க்கும் விற்பனையானது . ஏலத்தில், 47 விவசாயிகள் மற்றும் 7 வியாபாரிகள் பங்கேற்று பயனடைந்தார்கள். நெகமம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை கூடம் வாயிலாக இருப்பு வைத்தோ அல்லது உடனடி ஏல முறையிலோ விற்பனை செய்து கொள்ளலாம், என , க ண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ