உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாமன்ற கூட்டம்: ரோட்டில் போகுது மழை நீர்

மாமன்ற கூட்டம்: ரோட்டில் போகுது மழை நீர்

வரி செலுத்துவேன்...'

கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி பேசுகையில், ''வரி செலுத்துவதை முறைப்படுத்தும் நடவடிக்கையை, மாநகராட்சி மேற்கொள்கிறது. ஒரு சதவீதம் அபராதம் விதிப்பதை பெரிதாக பேசுகிறார்கள். சொத்து வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முன், நானே லேட்டாகத்தான் வரி செலுத்துவேன்; இப்போது, ஊக்கத்தொகை பெறுவதற்காக சீக்கிரமாக செலுத்துகிறேன்,'' என்றார்.

போக்குவரத்து சிக்கல்'

மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி பேசுகையில், ''கோவை அரசு மருத்துவமனைக்கு வெளியே நுாற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்களை, மருத்துவமனைக்கு வருவோர் நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். மழை பெய்தபோது, போக்குவரத்து பாதிப்பு அதிகமாக இருந்தது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்த, மாற்று இடம் ஒதுக்க வேண்டும். பாதாள சாக்கடை அடைப்பு நீக்குவதற்கு, 'சூப்பர் சக்கர்' வாகனத்தை, மாநகராட்சியே சொந்தமாக வாங்க வேண்டும். உடையாம்பாளையம், அல்வேர்னியா ஸ்கூல் பகுதியில், வடிகால் துார்வார வேண்டும்,'' என்றார்.

'ரோட்டில் போகுது மழை நீர்'

தி.மு.க., கவுன்சிலர் அப்துல் காதர் பேசுகையில், ''95வது வார்டு போத்தனுார் ரோட்டில், பல கோடி ரூபாய் செலவில் ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால், மழை நீர் வடிகால் சரியாக கட்டவில்லை. மழை சமயத்தில் தண்ணீர் ரோட்டில் ஓடுவதால், 'டேமேஜ்' ஆகிறது; மழை நீர் வடிகால் முறையாக கட்ட வேண்டும்; தண்ணீர் வெளியேறுவதற்கு வழித்தடம் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதிலளிக்கையில், ''பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனத்தின் விலை அதிகம்; இருந்தாலும் மாநகராட்சிக்கு அவசியம் தேவை. அவ்வாகனம் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, வடிகால் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை