உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  49 பஸ் ஸ்டாப்களில் நிழற்குடை மாநகராட்சியே அமைக்க முடிவு

 49 பஸ் ஸ்டாப்களில் நிழற்குடை மாநகராட்சியே அமைக்க முடிவு

கோவை: மேம்பாலம் கட்டுவதற்காக அகற்றப்பட்ட பஸ் நிறுத்த நிழற்குடைகளை, மீண்டும் அமைக்க நெடுஞ்சாலை துறை முன்வராததால், சொந்த செலவில் 49 நிழற்குடைகள் அமைக்க, மாநகராட்சி தீர்மானித்துள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் 375 இடங்களில் பஸ் ஸ்டாப் உள்ளது. அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலங்கள் கட்டியபோது, பல ஸ்டாப்களில் நிழற்குடை அகற்றப்பட்டது. மேம்பாலங்களை கட்டிய மாநில நெடுஞ்சாலைத்துறையோ, தேசிய நெடுஞ்சாலைத்துறையோ மீண்டும் நிழற்குடைகள் அமைத்துக் கொடுக்கவில்லை. வெயிலிலும், மழையிலும் பயணிகள் பாதிக்கப்படுவதால், மாநகராட்சியே முன்வந்து நிழற்குடை அமைக்க முடிவு செய்திருக்கிறது. தெற்கு மண்டலத்தில் 20, மேற்கு மண்டலத்தில் 18, வடக்கு மண்டலத்தில் 11 என, 49 இடங்களில் தலா ரூ.7.10 லட்சம் செலவில் நிழற்குடை அமைக்கிறது. இதற்கென ரூ.3.47 கோடி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 'ப்ரீகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் கன்டெய்னர் பாக்ஸ் வடிவில் நிழற்குடை நிறுவப்படும். ''பயணிகள் நிழற்குடையில் இருக்கை வசதி அமைக்கப்படும். பஸ்களின் வழித்தட எண்களை காட்டும் 'டிஜிட்டல் ஸ்கிரீன்' வைக்கப்படும்,'' என்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ