உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறை அருகே வீடுகளை இடித்த யானைகள்

வால்பாறை அருகே வீடுகளை இடித்த யானைகள்

வால்பாறை : வால்பாறை அருகே நள்ளிரவில் எஸ்டேட் பகுதிக்கு புகுந்த காட்டுயானைகள் 6 தொழிலாளர் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. வால்பாறை அடுத்துள்ளது ஹைபாரஸ்ட் எஸ்டேட். இங்கு நேற்று முன் தினம் 5 காட்டு யானைகள் நள்ளிரவு 3.00 மணிக்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் வெள்ளையன், வனசேகரன் என்ற தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தின. அருகில் ஆள் இல்லாத நான்கு வீடுகளையும் இடித்து சேதப்படுத்தியது. யானைகள் வீடுகளை இடிப்பதை அறிந்த இப்பகுதி தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். வனத்துறையினருடன் இணைந்து காட்டுயானையை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்