மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி: ப்ரீ ஸ்டைல், பட்டர்பிளையில் அசத்தல்
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி, எட்டிமடை அமிர்தா பல்கலையில் நடந்தது. கோவை மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர். மாணவியர், 14 வயதுக்கு உட்பட்ட 50 மீ., ப்ரீ ஸ்டைல் போட்டியில், குரும்பபாளையம் கே.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஷர்வானி, எஸ்.எஸ்.வி.எம். விதான் மெட்ரிக் பள்ளியின் தீக் ஷா, அசோக புரம் அரசு மேல்நிபைப் பள்ளியின் சாரதா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 100 மீ., ப்ரீ ஸ்டைல் போட்டியில், ஆர்.ஜே. மெட்ரிக்., பள்ளியின் நிகாரா மகேஷ், குரும்பபாளையம் கே.வி. மெட்ரிக் பள்ளியின் ஷர்வானி, எஸ்.எஸ்.வி.எம்., விதான் பள்ளியின் க்ரீஷா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 200 மீ., ப்ரீ ஸ்டைல் பிரிவில் ஆர்.ஜே. மெட்ரிக் பள்ளியின் நிகாரா மகேஷ் வெற்றி பெற்றார். 50 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில், இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியின் சுஹிதா, எஸ்.எஸ்.வி.எம்., விதான் பள்ளியின் லியா தாஸ்மிரா, க்ரிஷா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பெற்றனர். 100 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில், இந்துஸ்தான் பள்ளியின் சுஹிதா, ஆர்.ஜே. பள்ளியின் நிகாரா மகேஷ், விஸ்வபீத் மெட்ரிக் பள்ளியின் நிராலாயா, முதல் முன்று இடங்கள் பிடித்தனர். 50 மீ., ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில், பயனீர் மில்ஸ் பள்ளி தேஜாஸ்ரீ, விஸ்வபீத் பள்ளியின் நிராலயா, குரும்பபாளையம் கே.வி., மெட்ரிக் பள்ளியின் ஷர்வானி முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். 100 மீ., ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில், விஸ்வபீத் பள்ளியின் நிராலயா, பயனீர் மில்ஸ் தேஜாஸ்ரீ வெற்றி பெற்றனர். 150 மீ., பட்டர்பிளை பிரிவில், ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் லோகமித்ரா, எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியின் மிதிலா வெற்றி பெற்றனர். 100 மீ., பட்டர் பிளை பிரிவில், சின்மயா வித்யாலயாவின் லோகமித்ரா, எஸ்.எஸ்.வி.எம்., விதான் பள்ளியின் மித்ரா தேவி வெற்றி பெற்றனர்.