உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஜி.கே.என்.எம்.,ல் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு கிளினிக்

 ஜி.கே.என்.எம்.,ல் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு கிளினிக்

கோவை: ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் பிரத்யேக ஹைப்பர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி ( எச்.ஐ.பி.இ.சி.,) சிறப்பு கிளினிக் துவங்கப்பட்டது. மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார்.எச்.ஐ.பி.இ.சி., சிறப்பு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், உரிய மருத்துவ சிகிச்சை முறையினை தேர்வு செய்தல், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் நீண்டகால மருத்துவ கண்காணிப்பு ஆகியவற்றை அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர் குழுவின் மூலமாக வழங்கப்படும் என, எச்.ஐ.பி.இ.சி., திட்ட ஆலோசகர் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரவிசங்கரன் தெரிவித்தார் புற்றுநோயியில் துறை தலைவர் டாக்டர் சிவநேசன், அறுவை சிகிக்சை புற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் அருள்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி