உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நுால் தேவை அதிகரிப்பு பட்டுக்கூடு விலை உயர்வு

 நுால் தேவை அதிகரிப்பு பட்டுக்கூடு விலை உயர்வு

கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மாதம், 20 முதல் 25 டன்கள் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சில மாதங்களாக பட்டு நுால் தேவை அதிகரித்து இருப்பதால், பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. பட்டுக்கூடு ஏலத்தில், தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 740 ரூபாய்க்கும், அடுத்த தரம், 585 ரூபாய்க்கும் விற்பனையானது. பட்டு நுால் மார்க்கெட்டில் ஒரு கிலோ, 5341 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டு அங்காடி ஆய்வாளர் கூறுகையில், 'இப்போது பட்டு நுாலுக்கு டிமாண்ட் உள்ளது. போன வாரம் ஒரு கிலோ பட்டுக்கூடு ஒரு கிலோ, 850 ரூபாய்க்கு விற்பனையானது. புயல் காரணமாக மழை பெய்து வருவதால், பட்டுக்கூடின் தரம் குறைந்துள்ளது. 'அதனால், 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. மழை நின்ற பிறகு மீண்டும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை