உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பகுதி நேர நுாலகங்களை தரம் உயர்த்த நுாலகர்கள் அமைப்பு வேண்டுகோள்

 பகுதி நேர நுாலகங்களை தரம் உயர்த்த நுாலகர்கள் அமைப்பு வேண்டுகோள்

கோவை: பொது நுாலகத்துறையின் கீழ் செயல்படும், பகுதிநேர மற்றும் ஊர்புற நுாலகங்களை தரம் உயர்த்தி, வாசகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த ஊர்ப்புற நுாலகர்கள் நல அமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, அமைப்பின் மாநில துணைத்தலைவர் நாகராஜன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களிலும் நவீன வசதிகள் கொண்ட சிறப்பு நுாலகங்களை, அரசு உருவாக்கி வருகிறது. அதே போல், பொது நுாலகத்துறையின் கீழ் செயல்படும் பகுதிநேர மற்றும் ஊர்புற நுாலகங்களையும் தரம் உயர்த்தி, வாசகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இந்த நுாலகங்களில் கடந்த, 15 ஆண்டுகளாக சிறப்பு ஊதியம் பெற்று வரும், 1006 நுாலகர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன், சிறப்பு காலமுறை ஊதியதாரர்களை, காலமுறை ஊதியத்துக்கு மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை வரும் தேர்தலுக்கு முன், நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை