உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மதுபோதையில் காரில் துாங்கியவர் உயிரிழப்பு

 மதுபோதையில் காரில் துாங்கியவர் உயிரிழப்பு

தொண்டாமுத்தூர்: பச்சாபாளையம், சக்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 47. கேபிள் டி.வி., இணைப்பு கொடுக்கும் வேலை செய்து வந்தார். கார்த்திகேயன் மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். இதற்காக, கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மனைவி சரண்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்த கார்த்திகேயன் மீண்டும் மது அருந்த துவங்கியுள்ளார். கடந்த 2ம் தேதி இரவு, கார்த்திகேயன் மது அருந்திவிட்டு காரிலேயே தூங்கிவிட்டார். இரண்டு நாட்களாக, சரண்யா, கார்த்திகேயனின் மொபைல் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டும், தொடர்பு கொள்ள முடியவில்லை. சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கார்த்திகேயன் காரில், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை