உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாம்பியன்ஷிப் வென்ற மருதம் அணிக்கு டிராபி

 சாம்பியன்ஷிப் வென்ற மருதம் அணிக்கு டிராபி

கோவை: வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளியின் ஆண்டு விழாவையொட்டி, கலைத்திருவிழா, விளையாட்டு போட்டிகள் மற்றும் இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவில் நடந்த போட்டிகளின் முடிவில், 'மகிழ் முற்றம்' மருதம் அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென் றது. அந்த அணிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி 'டிராபி' வழங்கினார். தலைமையாசிரியர் பாலன் கூறுகையில், எங்கள் பள்ளியில் தற்போது 760 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்க, ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ