உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவையில் 30ம் தேதி மாஸ்டர்ஸ் தடகள போட்டி

 கோவையில் 30ம் தேதி மாஸ்டர்ஸ் தடகள போட்டி

கோவை: கோவை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், வரும் 30ம் தேதி தடகளப் போட்டி நடக்கிறது. நேரு ஸ்டேடியத்தில், 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 3,000 மீ., நடை, தடை தாண்டுதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 30 வயதில் இருந்து 80 வயதுக்கும் மேற்பட்டோர் என, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். மூத்தோர் தடகளப் போட்டியை பிரபலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். விபரங்களுக்கு: 98432 21711.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை