உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ராம்நகர் கே.எம்.சி.ஹச். சிட்டி சென்டரில் வலிப்பு நோயாளிகளுக்கான மருத்துவ முகாம்

 ராம்நகர் கே.எம்.சி.ஹச். சிட்டி சென்டரில் வலிப்பு நோயாளிகளுக்கான மருத்துவ முகாம்

'கோ வை ராம் நகரில் உள்ள கே.எம்.சி.ஹச். சிட்டி சென்டரில், வலிப்பு நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் வரும் 16ம் தேதி நடக்கிறது' என, கோ வை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர் கூறினார். அவர் கூறியதாவது: வலிப்பு நோய் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்வையும் வேலை அல்லது தொழில் வாழ்க்கையையும் பாதிக்கும் தீவிரமான ஒரு நரம்பியல் பிரச்னையாகும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. பெரும்பாலும் வலிப்பு நோயை மருந்துகளாலேயே குணப்படுத்திவிடமுடியும். சில வகையான வலிப்பு நோய்களுக்கு அறுவை சிகிச்சை, உணவுப் பழக்க மாறுதல் உள்ளிட்ட மாற்று சிகிச்சை முறைகள் தேவைப்படும். மூளையில் ஏற்படும் ஒழுங்கற்ற அல்லது அசாதாரண மின்னதிர்வுகள், பரம்பரையாக உள்ள குறை, மூளையில் ஏற்படும் காயம் அல்லது பக்கவாதத்தால் வலிப்பு நோய் வரலாம். ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அவர் நடத்தை அசாதாரணமாக மாறிவிடும், நினைவிழந்து விடுவார். ஆண்கள், பெண்கள் எந்த வயதினருக்கும், எந்த பிரிவினருக்கும் வலிப்பு நோய் வரவாய்ப்புண்டு. வலிப்பு நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக கே.எம்.சி.எச்.,ல், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோயாளிகளுக்காக, இ.இ.ஜி., வீடியோ கருவி வசதியும் உள்ளது. வலிப்பு நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவ முகாம், வரும் 16ம் தேதி நடக்கிறது. இம்முகாம் கோவை ராம்நகர், விவேகானந்தா ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டரில் காலை 9.30 முதல் மதியம், 1.30 மணி வரை நடக்கிறது. இதில், மருத்துவக்குழுவினர் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பொருத்தமான சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பர். கட்டுப்படுத்த இயலாத வலிப்பு நோய் உள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ள பெண்கள், குழந்தைகள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்; முன்பதிவு அவசியம். மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி