மேலும் செய்திகள்
விளையாட்டு மைதானத்தில் புதர் செடிகள்; மக்கள் அதிருப்தி
6 minutes ago
அரையிறுதி சுற்றுக்கு மாணவர்கள் தகுதி
01-Dec-2025
வால்பாறை: வால்பாறையில், குறுகலான காந்திசிலை பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை நகரில் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பஸ்களும், காந்தி சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் இருந்து, எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படும் காந்திசிலை பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு ஒரே ஒரு நிழற்கூரை மட்டுமே உள்ளது. இதனால், இடநெருக்கடியால் பயணியர் நிற்கக்கூட இடமில்லாமல், ரோட்டில் பல மணி நேரம் காத்திருந்து பஸ் பயணம் செய்கின்றனர். பயணியர் கூறியதாவது: வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டிற்கு, நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணியரும் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், மிகவும் குறுகலான இடத்தில், இந்த பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளதால், மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நிற்க இடமில்லாமல், ரோட்டில் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி, கூடுதலாக நிழற்கூரை கட்ட, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர். தீர்வு கிடைக்குமா? வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, காந்திசிலை வரை சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அரசு பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர்க்க, ேஷக்கல்முடி, மானாம்பள்ளி, சோலையாறுடேம், வில்லோனி, இஞ்சிப்பாறை, குரங்குமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் காந்திசிலை வளாகத்திலிருந்தும், சின்கோனா, சின்னக்கல்லார், பெரியகல்லார், முடீஸ், ைஹபாரஸ்ட், கெஜமுடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்தும் இயக்கினால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியும் என்கின்றனர் மக்கள்.
6 minutes ago
01-Dec-2025