உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஓ.ஆர்.எஸ்., விற்பனை கண்காணிப்பு; மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்தல்

 ஓ.ஆர்.எஸ்., விற்பனை கண்காணிப்பு; மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்தல்

கோவை: தேசிய உணவு பாதுகப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு உத்தரவின் படி, சர்க்கரை கலந்த பானங்களை ஓ.ஆர்.எஸ்., பெயரில், மருந்து கடைகளில் விற்பனை செய்ய கூடாது; மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்புத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார வழிகாட்டுதலின்படி, ஒரு லிட்டர் ஓ.ஆர்.எஸ்., கரைசலில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் இருந்தால் மட்டுமே, ஓ.ஆர்.எஸ்., என்ற லேபிளை பயன்படுத்த இயலும். ஆனால், குளிர்பானங்களில் உயிரிழப்பைத் தடுக்கும், எலக்ட்ரோலைட்ஸ் குறைந்த அளவில் இருப்பதும், சர்க்கரை அளவு அதிகம் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டு, நீதிமன்ற அறிவுறுத்தலின் படி ஓ.ஆர்.எஸ்., கரைசல் லேபிள் குளிர்பானங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு மருந்துகடைகளில் உள்ளவற்றை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''சர்க்கரை கலப்புள்ள குளிர்பானங்களில் ஓ.ஆர்.எஸ்., லேபிள் பயன்படுத்த அனுமதியில்லை. உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மருந்து கடைகளில் இதுகுறித்து கண்காணிக்க, கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ