உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதிரியாருக்கு பிரிவு உபசார விழா

பாதிரியாருக்கு பிரிவு உபசார விழா

மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதிரியாராக ஹென்றி லாரன்ஸ், கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் திருப்பூர் குமார் நகரில் உள்ள சூசையப்பர் ஆலயத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பங்கு மக்கள், அன்பியத்தினர், பக்த சபைகள் சார்பில், பிரிவு உபசார விழா, அந்தோணியார் ஆலயத்தில் நடந்தது.முன்னதாக காலையில் பாடல் திருப்பலி நடந்தது. பாதிரியார் ஜோ டேனியல் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினார். அதன் பின்பு நடந்த பிரிவு உபசார விழாவில் பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் ஏற்புரை வழங்கினார். டீக்கன் மிக்கேல் அதிதூதர், ஆண்ட்ரூஸ் உட்பட்ட பலர் பேசினர். திருப்பூர் குமார் நகரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் பணியாற்றி வரும் பாதிரியார் பிலிப், மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதிரியாராக மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி