உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சிறுமிக்கு தொல்லை அளித்தவர்களுக்கு சிறை

 சிறுமிக்கு தொல்லை அளித்தவர்களுக்கு சிறை

சூலூர்: சுல்தான்பேட்டை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, அவரை, போதையில் இருந்த இரு வாலிபர்கள் துரத்தி தொல்லை கொடுத்தனர். ஊருக்குள் வந்த சிறுமி, மக்களிடம் தகவலை கூறினார். அக்கம்பக்கத்தினர் அந்த இரு வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர். இருவரும் அருகில் இருந்த, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதிக்க முயன்று, மரக்கிளையில் சிக்கி கொண்டனர். சூலூர் தீயணைப்பு வீரர்கள், சுல்தான்பேட்டை போலீசார் இருவரையும் மீட்டனர். இருவரும் திருநெல்வேலியை சேர்ந்த சரண், 22, சுரேஷ், 22 என்பதும், ஜல்லிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் டிரைவர்களாக வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை