உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு அரிசி, புத்தாடை வழங்கல்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ., புத்தாடை வழங்கினார். கிணத்துக்கடவு பேரூராட்சி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் எம்.எல்.ஏ., தாமோதரன், தீபாவளியை முன்னிட்டு அரிசி, புத்தாடைகள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். எம்.எல்.ஏ., அலுவலகம் சுற்று பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பட்டாசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை