உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அகல்விளக்கு விற்பனை ஜோர்

 கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு அகல்விளக்கு விற்பனை ஜோர்

வால்பாறை: நாளை (3ம் தேதி) கார்த்திகை தீபத்திருநாளை கொண்டாடும் வகையில், வால்பாறையில் அகல்விளக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. சிவபெருமான் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நாளில் அக்னியாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்நாள் கார்த்திகை தீபத்திருநாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாளை (3ம் தேதி) கார்த்திகை தீபத்திருநாளில், கோவில் மற்றும் வீடுகளில் அகல்விளக்கேற்றி, தீபத்திருவிழா கொண்டாடுகின்றனர். வீடுகளில் தொடர்ந்துமூன்று நாட்களுக்கு அகல்விளக்கு ஏற்றி மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள கடைகளில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அகல்விளக்கும் விற்பனை சூடுபிடித்துள்ளது. சாதாரண அகல் விளக்குகள், 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை இரண்டு வகையாக விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்ற தேவையான அகல்விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், தீபத்திருநாளை முன்னிட்டு, தீப எண்ணெய் மற்றும் பஞ்சு திரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையும் சூடுபிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ