புதர் அகற்றப்படுமா? கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள, விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் அதிகளவு செடி, கொடிகள் முளைத்துள்ளன. இங்கு மாலை நேரத்தில் ஏராளமான மக்கள், நடைபயிற்சிக்கும், விளையாடவும் வந்து செல்கின்றனர். மக்கள் நலன் கருதி, செடி, கொடிகளை அகற்றம் செய்ய வேண்டும். --- ராஜ்குமார்: தெருநாய் தொல்லை பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ராஜாஜி வீதியில் குடியிருப்பு அருகே, தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். --- சண்முகம்: போக்குவரத்து நெரிசல் பொள்ளாச்சி, பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் பாரம் இறக்க, லாரிகள் அதிகம் வந்து செல்கிறது. இந்த நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவ்வழியில் செல்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- டேனியல்: ரோடு சேதம் கிணத்துக்கடவு, நெ.10.முத்தூரில் இருந்து சிங்கையன்புதுார் செல்லும் தார் ரோடு சேதமடைந்து, மண் ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பலர் சிரமத்துடன் பயணிக்கின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும். -- மாணிக்கம்: ரோட்டோரத்தில் புதர் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவிலிருந்து நெ.10. முத்தூர் செல்லும் ரோட்டில், இரு பகுதியிலும் புதர்கள் அதிக அளவிற்கு வளர்ந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை அகற்றம் செய்ய வேண்டும். -- ரஞ்சித்: கழிவுகளை அகற்றணும் உடுமலை நகராட்சி ஸ்ரீநகர் நகராட்சி பூங்கா முன், வடிகாலில் கழிவுகள் எடுக்கப்பட்டு வெளியே போடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுகளை வேறு பகுதிக்கு எடுத்துச்செல்ல, நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மோகன்: பாதாளச்சாக்கடை மூடி சேதம் உடுமலை நேரு வீதி பாதாளச்சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. இதனால், இந்த வீதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, பாதாளச்சாக்கடை மூடியை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்தசாமி: குடியிருப்பில் புதர் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அலுவலர் குடியிருப்பு புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த புதர்களை அகற்ற ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணன்: கழிவுநீர் தேக்கம் உடுமலை பெரியார் நகர் சுரங்கப்பாலத்தில், அப்பகுதி கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சின்னசாமி: ஓடையை துார்வாரணும் உடுமலை தங்கம்மாள் ஓடை துார்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவசாமி: பஸ் ஸ்டாண்டில் பள்ளம் உடுமலை பஸ் ஸ்டாண்டில், கோவை செல்லும் பஸ்கள் நுழையும் இடத்தில் மெகா பள்ளம் காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்லும் போது, சிரமப்படுகின்றன. எனவே, அப்பள்ளத்தை நகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். - செல்வம்: