உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுக்கு வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி

 சுக்கு வியாபாரியிடம் ரூ.19 லட்சம் மோசடி

கோவை: கேரளா இடுக்கி மாவட்டம், மலையேரி கண்டத்தை சேர்ந்தவர் விஷ்ணு,23; கர்நாடகா ஸ்பைசஸ் என்ற பெயரில், சுக்கு வர்த்தகம் செய்து வருகிறார். கோவை, சுங்கம், பைபாஸ் ரோட்டில், ஏ.பி.எம்., டிரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வரும், குனியமுத்துாரை சேர்ந்த அபுதாகிர், சிக்கந்தர், பாலசந்தர் ஆகியோர், விஷ்ணுவை தொடர்பு கொண்டு, 11 டன் சுக்கு ஆர்டர் கொடுத்தனர். ஒரு கிலோ, 198 ரூபாய் வீதம் மொத்தம், 22.97 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்தனர். அட்வான்ஸ் தொகை நான்கு லட்சம் ரூபாய் அனுப்பினர். ஆர்டர் கொடுத்த முகவரிக்கு சுக்கு மூட்டைகளை அனுப்பி வைத்தார். வங்கி கணக்கில் பிரச்னை இருப்பதால் மீதி தொகை, 18.97 லட்சம் ரூபாய் உடனடியாக செலுத்த முடியவில்லை என்று விஷ்ணுவுக்கு தகவல் தெரிவித்தனர். பல மாதங்களாகியும் மீதி பணத்தை அனுப்பாமல் ஏமாற்றி வந்தனர். கோவையில் அவர்கள் கொடுத்த முகவரி அலுவலகம் பூட்டபட்டு கிடந்தது. ராமநாதபுரம் போலீசில் விஷ்ணு புகார் அளித்தார். இது தொடர்பாக, அபுதாகிர், சிக்கந்தர், பாலசந்தர் ஆகியோர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை