உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தமிழக தடகள அணி தேர்வு; சிறப்பு பயிற்சிக்கு அழைப்பு

 தமிழக தடகள அணி தேர்வு; சிறப்பு பயிற்சிக்கு அழைப்பு

கோவை: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான தடகள போட்டிக்கு, தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மாணவ, மாணவியருக்கான பயிற்சி முகாம், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாணவ, மாணவியர் வரும், 8ம் தேதி காலை, 10:00 மணிக்கு வர வேண்டும். முகாமை தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் நடக்கும் தேசிய போட்டியில், தேர்வு செய்யப்படுபவர்கள் பங்கேற்க உள்ளனர். குளிர்காலம் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் குளிர்கால உடைகள், உடைமைகள் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை