உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தைப்பூச விழா; பறவைக்காவடி எடுத்து பரவசம்

தைப்பூச விழா; பறவைக்காவடி எடுத்து பரவசம்

வால்பாறை;வால்பாறையில் நேற்று நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பரவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 19ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுகாலை, 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.காலை, 11:00 மணிக்கு வால்பாறை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்தனர். அதன்பின் சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கும் விழாவை தாசில்தார் வாசுதேவன், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், டாக்டர் முனுசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.நல்லகாத்து ஆற்றில் இருந்து முருக பக்தர்கள் அங்கஅலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். முதியவர் ஒருவர் காலில் ஆணிக்கால் பலகை அணிந்து ஊர்வலத்தில் நடந்து சென்றார்.மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் எழுந்தருளி, தேவியருடன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். தைப்பூசத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்