உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கண்றாவியாக உள்ளது கழிவறை மயக்கத்தில் டாஸ்மாக் நிர்வாகம்

 கண்றாவியாக உள்ளது கழிவறை மயக்கத்தில் டாஸ்மாக் நிர்வாகம்

கோவை: கோவை டாஸ்மாக் குடோன் மற்றும் அலுவலகத்தில் அசுத்தமாக உள்ள கழிப்பறைகளையும், உள்புறம் குண்டு குழியுமாக உள்ள சாலைகளையும், சரி செய்ய, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊழியர்கள் சங்க தலைவர் ஜான் அந்தோணிராஜ் கூறியிருப்பதாவது. பீளமேடு புதுாரில் உள்ள டாஸ்மாக் குடோன் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், அரசு நிறுவனமான சிந்தாமணி கூட்டுறவு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் செயல்படுகிறது. தினமும், 500க்கும் மேற் பட்டோர் பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளுக்கு, ஊழியர்களின் நலன் மீது அக்கறை இல்லை. குடோனுக்குள் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி