ஜீன்ஸை தூக்கி போடுங்க நீங்களும் ட்ரெண்ட் செட்டர்தான்!
''எ ப்போதும் ஒரே மாதிரியான ஜீன்ஸ் பேன்ட்டை மட்டும் போட்டால் எப்படி? புதிதாக சந்தையில் வந்துள்ள பேன்ட்சை தேர்ந்தெடுத்து, நீங்களும் ட்ரெண்டியாகவும், ஸ்டைலிஷாகவும் மாறி, ட்ரெண்ட் செட் பண்ணலாம்,'' என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் நந்தா. கூர்கா பேன்ட்ஸ் கூர்கா பேன்ட்சை, பார்மலாகவும் கேஷுவலாகவும் பயன்படுத்தலாம். ஒரு வின்டேஜ் ஸ்டைலை விரும்புபவர்களுக்கு, இது பெஸ்ட் சாய்ஸ். பிளீட்டெட் வைட் லெக் டிரவுசர்ஸ் தளர்வான, ஆனால் ஸ்டைலான இந்த டிரவுசர்கள் கோடை காலத்திற்கு ஏற்றவை. சவுகரியம் மற்றும் ட்ரெண்டிங் இரண்டும் இதில் உண்டு. ரிலாக்ஸ் பிட் கார்கோஸ் பாக்கெட்டுகள் நிறைந்த கார்கோ பேன்ட்கள், முன்பைவிட இப்போது 'ரிலாக்ஸ் பிட்' ஆக வந்துள்ளன. இது ஒரு 'அட்வென்ச்சர் லுக்' கொடுக்கும். டேபேர்ட் பேன்ட்ஸ் இடுப்பில் இருந்து முட்டி வரை தளர்வாகவும், கணுக்காலுக்கு அருகில் குறுகலாகவும் வரும் இந்த பேன்ட்ஸ், மிக ஸ்டைலானது. சவுகரியமான, ஷார்ப் லுக் வேண்டுமானால் இது பெஸ்ட். லினன் ட்ரவுசர்ஸ் லினன் துணியில் செய்யப்பட்ட ட்ரவுசர்கள், குறிப்பாக வெயில் காலத்திற்கு ஏற்ற ட்ரெண்ட். கூலாக இருப்பதுடன், ரிச் தோற்றத்தையும் கொடுக்கும். சினோஸ் பேன்ட்ஸ் சினோஸ் ஜீன்ஸைப் போல் அல்லாமல், மிருதுவாக இருக்கும் சினோஸ் பேன்ட்களின் நிறங்களில் (பீஜ், ஆலிவ் க்ரீன்) ஒரு கலெக்ஷனையே வைத்துக் கொள்ளலாம். பார்மல், கேஷுவல் ஆகிய இரண்டுக்கும் பொருத்தமாக இருக்கும். உங்கள் வார்ட்ரோப் முழுவதும், ஒரே மாதிரியான ஜீன்ஸ் நிறைந்திருப்பதை மாற்றி, இந்த புதிய வெரைட்டியை கலெக்ஷனில் சேருங்கள். ஒரு டி -ஷர்ட் மற்றும் சாதாரண ஷூவுடன் கூட, இந்த பேன்ட்ஸ் உங்களை, 'ட்ரெண்ட் செட்டர்' ஆக மாற்றும். - நந்தா ஆடை வடிவமைப்பாளர்.