உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரயில் பயணம் பாதுகாப்பு; குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

 ரயில் பயணம் பாதுகாப்பு; குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் சார்பில், ரயிலில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவை வட்ட ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமை தாங்கி பேசினார். சப் - இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தனியார் பவுண்டேஷன் டாக்டர் பமீலா கலந்து கொண்டு பேசியதாவது:- நமது தனிப்பட்ட விவரங்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் பகிரக்கூடாது. நமக்கு மற்றவர்களால் வரும் பிரச்சனைகளை எதிர்த்து நிற்க, மனதில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் மனதில் உள்ள எண்ணங்களை மற்றவர்களிடம் கூறும்போது தான் நமக்குத் தேவையான உதவியை பெற முடியும். ரயிலில் பயணம் செய்யும்போது, ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் இன்றைய இளைஞர்கள் அதிக நேரமாக செல்போனில் காலத்தை கழித்து வருகின்றனர். இந்த பழக்கம் நமது எதிர்கால வாழ்க்கையை சீரழித்து விடும். எனவே செல்போனுக்கு அடிமையாவதை தவிர்த்து அதனை விட்டு வெளியே வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை