ச மையலறை பிரஷர் குக்கர் முதல் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் வரை... நாம் கண்ணை மூடிக்கொண்டு, நம்பி வாங்கும் பொருட்க ளின் தரம், உண்மையில் நம்பகமானதா என்பது பெரும் கேள்விக்குறியே. இதுகுறித்த அடிப்படை விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் என்கிறார், பி.ஐ.எஸ்., கோவை கிளை இயக்குநர் ஹேமலதா பணிக்கர். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது.. n குக்கர் முதல் தங்கம், வெள்ளி, சிலிண்டர், ஹெல்மெட், சிமென்ட் , குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் என, அனைத்துக்கும் தரச்சான்று வழங்கப்படுகிறது. n பி.ஐ.எஸ்., தரச்சான்று இருந்தால், பொருட்களை நம்பி தைரியமாக வாங்கலாம். பொருட்களின் தரத்திற்காக ஐ.எஸ்.ஐ., தரச்சான்று, நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் செயல்பாடுகளுக்கு ஐ.எஸ்.ஓ., எனும் தரச்சான்று, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க், எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சி.ஆர்.எஸ்., என, தரச்சான்று பிரிவு வாரியாக வகைப்படுத்தப்படுகிறது. n பொதுமக்கள் தங்கள் மொபைலில், 'பி.ஐ.எஸ். கேர்' (BIS CARE) செயலியை கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். டி.வி., சிலிண்டர், வீட்டுக்கான மின் சாதனங்கள், தங்க நகை, சிமென்ட், இரும்பு கம்பிகள் என எது வாங்கினாலும், அதில் உள்ள பி.ஐ.எஸ்., பதிவு எண்ணை செயலியில் உள்ளீடு செய்தால், தயாரிப்பாளர் உட்பட அனைத்து விவரங்களும் வந்துவிடும். வரவில்லை என்றால் போலி என, தெரிந்து கொண்டு புகாரை பதிவு செய்யுங்கள். n தங்க நகை வாங்கும்போதும், பொதுமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹால்மார்க் முத்திரையைத் தாண்டி, வேறு இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன. தரத்தை உறுதி செய்யும் எண், அதாவது நகையின் துாய்மை குறித்த விவரங்கள், எச்.யூ.ஐ.டி., எனும் பிரத்யேக ஆறு இலக்க எண் உள்ளதா என்பதை உறுதிசெய்து, அதை செயலியில் பரிசோதித்து வாங்க வேண்டும். இதை பரிசோதிக்கும் கண்ணாடி கடையிலேயே வழங்குவார்கள். n வாடிக்கையாளர்கள், பணத்தைப் பாதுகாக்க மட்டுமல்லாமல், நம் உடல்நலன் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். காய்கறி மட்டுமல்ல, வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் பரிசோதித்து வாங்க வேண்டும்.