உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேளாண் பல்கலையில் உலக மண் தின கொண்டாட்டம்

 வேளாண் பல்கலையில் உலக மண் தின கொண்டாட்டம்

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இந்திய மண்ணியல் சங்கம், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, இயற்கை வேளாண் இயக்குநரகம் சார்பில், 'ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்' என்ற தலைப்பில், உலக மண் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடந்த, மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை, துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, புகழ்பெற்ற மண் விஞ்ஞானி 'ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவு' நடந்தது. இயற்கை வள வேளாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியம், ஒடிசா, கோராபுட் இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ராஜாவின் சிறந்த பங்களிப்புகளை விவரித்தார். லக்னோ, கரும்பு ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்குழு உறுப்பினர் ராக்கியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மண் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை தலைவர் செல்வி, பேராசிரியர் செல்லமுத்து, விஞ்ஞானிகள், மாணவர்கள், ஓய்வு பெற்ற மண்ணியல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை