உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பஸ்சில் பணம் திருட்டு: இளம் பெண்கள் கைது

 பஸ்சில் பணம் திருட்டு: இளம் பெண்கள் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பஸ்ஸில் பாரத் செல்வி, 38, என்ற பெண் பயணித்துள்ளார். பஸ்ஸில் நெரிசல் அதிகமாக இருந்ததால், அவர் நின்று கொண்டே பயணித்துள்ளார். இதனிடையே சத்தியமூர்த்தி நகர் அருகே பஸ் வரும்போது, நடத்துனர் பாரத் செல்வியிடம் டிக்கெட் எடுக்க சொல்லி கேட்டார். அப்போது பாரத் செல்வி தனது கைப்பையை பார்த்தபோது, அது திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்து பணம் திருடு போயிருந்தது. சத்தமிட்டதும் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது பஸ்ஸில் இருந்து இரண்டு இளம் பெண்கள் வேகமாக கீழே இறங்கி ஓட முயற்சித்தனர். அவர்களை பஸ்சில் உள்ள சகப் பயணிகள் பிடித்து, மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் அஞ்சலி, 27, மற்றும் ரம்யா, 28, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை