மாவட்டத்தில் குரூப்-2 தேர்வு 17,025 பேர் பங்கேற்பு
கடலுார்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடலுார் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு நடந்தது. தமிழகம் முழுதும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு நடந்தது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் , சார் பதிவாளர் நிலை - 2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என, 645 காலி பணியிடங்களுக்கு, 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிருந்தனர். கடலுார், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த தேர்வை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூ லம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் நடந்தது. இதற்காக, 22,174 பேர் விண்ணப்பித்தனர். கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய வருவாய் வட்டங்களில் 49 தேர்வு மையங்களில் 74 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்து. 17,025 பேர் தேர்வு எழுதினர். 5, 689 பேர் எழுதவில்லை. விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்ல ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது' என்றார். இதே போன்று, விருத்தா சலம் மையங்களில் நடந்த தேர்வை ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா, நில எடுப்பு ஆர்.டி.ஓ., குணசேகர், தாசில்தார் அரவிந்தன் ஆய்வு செய்தனர்.