| ADDED : டிச 02, 2025 04:52 AM
ராமநத்தம்: ராமநத்தம் அருகே ஐஸ்வரியம் புதிய திருமண மஹால் திறப்பு விழா நடந்தது. ராமநத்தம் அடுத்த ஆவட்டி கூட்டுரோட்டில், திருச்சி மார்க்க சர்வீஸ் சாலையில் ஐஸ்வரியம் திருமண மஹால் திறப்பு விழா நடந்தது. திருமண மஹாலை தம்புரான் ரிஷாபநந்தர் சுவாமி திறந்து வைத்தார். உரிமையாளர் ஜெய முருகேசன் மற்றும் கல்லுார் முன்னாள் ஊராட்சி தலைவர் வளர்மதி, அவரது மகன்கள் ஆதித்யா வசந்த், நவீன் ஜெய் சத்யா ஆகியோர் வரவேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல் .ஏ., விருத்தாசலம் நகர முன்னாள் சேர்மன் சங்கவி முருகதாஸ், கள்ளக்குறிச்சி தி.மு.க., மாவட்ட நிர்வாகி வேலுசாமி, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நடேசன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், குறிஞ்சிப்பாடி சாஸ்திரி குமரகுருபரன், கிராம முக்கியஸ்தர்கள், உறவினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருமண மஹால் குறித்து உரிமையாளர் ஜெய முருகேசன் கூறியதாவது; ஐஸ்வரியம் மஹால், ஆவட்டி கூட்டுரோட்டில், திருச்சி மார்க்க சர்வீஸ் சாலையையொட்டி, 24 மணிநேர போக்குவரத்து வசதி பெற்ற இடத்தில் அமைந்துள்ளது. மஹாலில் குளிர்சாதன வசதி, ஒரே நேரத்தில் 650 பேர் அமரவும், 200 பேர் உணவருந்தும் டைனிங் ஹால், 100 கார்களுக்கு மேல் பார்க்கிங் செய்யும் இடவசதி உள்ளது. 3 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேருக்கு சமைக்கும் வீதம் நவீன சமையல் கூடம் உள்ளது. அனைத்து சுப நிகழ்ச்சிகள் நடத்த மண்டபம் புக்கிங் செய்ய, 77880 02288, 94449 18915 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.