| ADDED : டிச 02, 2025 04:51 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பாபாஜி கோவிலில் அவரது, 1822ம் ஆண்டு பிறந்த நாள் விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை சுங்க அலுவலகம் அருகே பாபாஜி கி.பி. 203ம் ஆண்டு கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தார். பாபாஜி பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டு தினமும், சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பாபாஜியின் 1822ம் ஆண்டு பிறந்த நாள் விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கோவில் முழுவதும் தோரணங்கள், பூக்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அன்று காலை 8;45 மணிக்கு பாபாஜிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 3:00 மணிக்கு மந்திர யாகம் துவங்கி, மறுநாள் 5ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை, கிரியா பாபாஜி யோகா சங்கத்தினர்கள் செய்து வருகின்றனர்.