| ADDED : நவ 17, 2025 01:15 AM
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு தெருமுனை விளக்க பிரச்சார கூட்டம், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே நடந்தது. மாவட்ட பிரசார பிரிவு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலமுரளி வரவே ற்றார். துணைத்தலைவர்கள் காந்திகுமார், துரை முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரா, பொருளாதா பிரிவு மாநில செயலாளர் மேகநாதன், பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் பொன்னம்பலம் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் வினோத் ராகவேந்திரா பேசியதாவது: தி.மு.க., அரசுக்கு பிரதமர் மோடியைப்பற்றி பேச தகுதியில்லை. 'யார் அந்த சார்' என்பதே டிரெண்டிங் விஷயம். இந்த சார் (எஸ்.ஐ.ஆர்.) முடிவுக்கு வரும்போது, என்ன ஏமாற்று வேலை செய்து கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது என்பது தெரியும். சிறப்பான ஆட்சி, சிறப்பான திட்டங்கள், எந்தவித ஸ்டிக்கரும் இல்லாமல் தமிழகத்திற்கு நேரடியாக கிடைக்க வரும், 2026ம் தேர்தலில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.