உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ரூ. 1 கோடியில் கட்டிய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழ்

 ரூ. 1 கோடியில் கட்டிய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராமல் பாழ்

நெல்லிக்குப்பம்: சரவணபுரம், வைடிபாக்கம் பகுதியில் ரூ. 1 கோடியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், நுாலகம், அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமல் பாழாகி வருகிறது. நெல்லிக்குப்பம் நகராட்சி சரவணபுரம், வைடிபாக்கம் பகுதிகளில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை குடும்பத்தினர். இதில், பலர் வீடுகளில் கழிவறை வசதி இல்லாததால், திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன் சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கபடாமலேயே பாழாகியது. இந்நிலையில் அங்கு 30 லட்சத்தில் புதியதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டட பணி முடிந்து 8 மாதமாகிறது. ஆனால் இதுவரை திறக்காததால் புதர்கள் மண்டி வருகிறது. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது; சுகாதார வளாக பணி முடிந்து 8 மாதமாகிறது. அங்கு ஆழ்துளை கிணறு அமைத்தனர். ஆனால் மோட்டார் அமைக்கவில்லை. அதேபோல் செப்டிக் டேங்க் கட்டவில்லை. இப்பகுதியில் பணிகள் முடிந்த சுகாதர வளாகம், நுாலகம், அங்கன்வாடி மையம் என ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகிறது. அதிகாரிகள் டெண்டர் விட்டு ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்குவதோடு தங்களது பணி முடிந்ததாக நினைப்பதால் மக்கள் பணம் பாழாகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த கட்டிடங்களை திறக்க வேண்டும் என கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை