மேலும் செய்திகள்
வாலிபரை தாக்கிய ஆசாமி மீது வழக்கு
17-Oct-2025
விருத்தாசலம்: மளிகை கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 34. இவர் தனது வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த, அதேபகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் ரகுபதி, 26, என்பவர் குடிபோதையில் சரவணனை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் ரகுபதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Oct-2025