உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சிதம்பரம் நடராஜர் கோவிலில் மயங்கி விழுந்த வெளிநாட்டு பெண்

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் மயங்கி விழுந்த வெளிநாட்டு பெண்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்பெயின் நாட்டு பெண்மணி மயங்கி விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். நேற்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அக்குழுவினர் கோவிலுக்குள் சென்றபோது, மரியாஜோசப் என்ற பெண்மணி, திடீரென கோவிலுக்குள் மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் அவருக்கு மு தலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் வயிற்று வலி இருப்பதாக தெரிய வந்தது. அதனை அடுத்து ஸ்பெயின் நாட்டு குழுவினருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட் டார். வெளிநாட்டு பெண்மணி கோவிலில் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி