உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி., எம்.எல்.ஏ., நினைவு தின கூட்டம்

மாஜி., எம்.எல்.ஏ., நினைவு தின கூட்டம்

காட்டுமன்னார்கோவில்: -: காட்டுமன்னார்கோவில் தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி 36வது நினைவு தின அமைதி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் ஒன்றிய நகர தி.மு.க., மற்றும் எம்.ஆர்.கே.நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில் மோவூர் நினைவிடத்தில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம் கோவி செழியன் பங்கேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நினைவிடத்தில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, அமைதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலம் குடந்தை ஜேம்ஸ்பாண்ட் இசைக்குழுவினர் நிகழ்ச்சியுடன் தெற்கிருப்பு ஓமாம்புலியூர் ரோடு வழியாக காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே செட்டி தெரு பொதுக்கூட்ட திடலுக்கு வந்ததடைந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்றார். அறக்கட்டளை தாளாளர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கோவி செழியன், மாஜி எம்.எல்.ஏ., புகழேந்தி குத்தாலம் கல்யாணம், மாவட்ட பொருளாளர் கதிரவன், மருதூர் ராமலிங்கம், ஆடுதுறை உத்திராபதி பேசினர். எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், பூராசாமி, ஜெயபாண்டியன், கார்த்திகேயன், நிசார் அகமது, சின்னப்பா மணிமாறன், அறிவழகன், கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். எம்.ஆர்.கே. நற்பணி மன்ற தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ